ஷெர்வானி அணிந்து இந்திய மாப்பிள்ளை போல தோற்றமளிக்கும் எலான் மஸ்க்

0 3519

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட எலான் மஸ்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்திய மாப்பிள்ளை போல எலான் மஸ்க் ஷெர்வானி அணிந்துகொண்டு குதிரை மீது அமர்ந்துள்ளது போலவும், நடனமாடுவது போலவும் உள்ள புகைப்படங்களைப் பார்த்த பலர், இது எப்போது என இணையத்தில் விவாதம் நடத்திய நிலையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது தெரியவந்தது.

மும்பையை சேர்ந்த ரோலிங் கேன்வாஸ் என்ற திருமணப் புகைப்பட கலைஞர், செயற்கை நுண்ணறிவில் மிட்ஜர்னி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மஸ்கின் புகைப்படங்களை உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தனக்கு பிடித்துள்ளதாக ட்விட்டரில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments