ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி

0 7434

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு குஜராத் அணி தகுதி பெற்றுள்ளது.

மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் ஆடிய குஜராத் அணி 20ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் அபாரமாக விளையாடி 60 பந்துகளில் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆடிய மும்பை அணி 18 புள்ளி 2 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments