மகள்களுக்கே மொத்த சொத்துகளையும் கொடுத்ததால் ஆத்திரம்... பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் - தாய் பலி

0 2082
மகள்களுக்கே மொத்த சொத்துகளையும் கொடுத்ததால் ஆத்திரம்... பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் - தாய் பலி

நாகர்கோவில் அருகே மகள்களுக்கு மொத்த சொத்துக்களையும் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் போலீசில் சரணடைந்தார்.

திட்டுவிளையைச் சேர்ந்த பவுல் - அமலோத்பவம் தம்பதிக்கு மோகன் தாஸ் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மோகன் தாஸ் வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துக் கொண்டதால், அதனை ஏற்றுக் கொள்ளாத தந்தை, சொத்து முழுவதையும் மகள்களுக்கே கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனக்கு சொத்து கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் அடிக்கடி பெற்றோருடன் தகராறு செய்த மோகன் தாஸ், நேற்றிரவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மோகன் தாஸ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பெற்றோரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவரது தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மோகன்தாஸ் போலீசில் சரணடைந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments