மறைமலைநகர் அருகே பாமக நிர்வாகி வெட்டி கொலை.. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

0 1114

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாமக நிர்வாகியை வெட்டி கொலை செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அனுமந்தபுரத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி மனோகரன் என்பவர் தனது நண்பரை பார்ப்பதற்காக கொண்டமங்களத்திற்கு  இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கொண்டமங்களம் ஊராட்சி அலுவலகம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த  நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது. இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments