"2 ஆயிரம் ரூபாய வெச்சுகுனு என்ன விடு தெய்வமே.." மது போதையில் ஆட்டோவுடன் சிக்கிய நபர் போலீசாரிடம் கெஞ்சல்..!

சென்னை திருவொற்றியூர் அருகே மது போதையில் ஆட்டோவுடன் சிக்கிய நபர் ஒருவர் போக்குவரத்து போலீசாரிடம் கெஞ்சி கூத்தாடிய வீடியோ வெளியாகி உள்ளது.
சென்னை ராயபுரம் கல்மண்டபம் சிக்னல் அருகே இரவு போக்குவரத்து உதவி ஆய்வாளர் காந்தி மற்றும் ஓட்டுநர் பணியிலிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ ஒன்றில் இருந்து பீர் பாட்டில் வீசி எறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆட்டோவை துரத்தி சென்று பிடித்த போலீசார், மதுபோதையில் ஓட்டியதை உறுதி செய்து அபராதம் விதித்துள்ளனர்.
அப்போது போதையில் இருத்த நபர், 2 ஆயிரம் ரூபாயை எடுத்து கொடுத்து தம்மை விட்டு தெய்வமே கெஞ்சி கூத்தாடியுள்ளார்.
ஆனால் அதை பொருட்படுத்தாத போக்கு வரத்து காவலர் ஆட்டோவை காவல்நிலையத்துக்கு ஓட்டி சென்றார்
Comments