காசிமேடு மீன்பிடி துறைமுகம் வார்ப்பு பகுதியில் போதைமருந்து தயாரிக்க முயன்ற 4 பேர் கைது..!

0 1233

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் வார்ப்பு பகுதியில் போதைமருந்து தயாரிக்கும் 90 கிலோ மூலப்பொருட்களை வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சம்சுதீன் உள்ளிட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில் போதை மருந்து தயாரிக்கும் மூலப்பொருள் 90 கிலோ வைத்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments