பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் உட்பட 8 பேர் கைது ... சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்..!
திண்டிவனம் அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளிமேடு பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் கடந்த 17 ஆம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடினார். பட்டாக்கத்தியால் கேக் வெட்டி, கஞ்சா வழக்கில் இரு முறை சிறை சென்றதாகக் கூறப்படும் சூர்யா என்பவருக்கு ஊட்டியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவின் அடிப்படையில் 8 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான சூர்யாவை தேடி வருகின்றனர்.
இதே பாணியில் மதுரை மீனாட்சிபுரம் சரஸ்வதி தியேட்டர் அருகே உள்ள திருமண மண்டபத்தில் முத்துமணி என்பவர்வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யார், யார் என்பதை அடையாளம் கண்டுள்ள போலீசார், அவர்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
Comments