அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு தனித்துவமாக ஒரு கவுன்சில் அமைக்க அக்குபஞ்சர் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கோரிக்கை.!

0 1613

அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு தனித்துவமாக ஒரு கவுன்சில் அமைத்து தங்களுக்கு தேவையானவற்றை அரசு முறைப்படி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கில் அக்குபஞ்சர் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மருத்துவர் என்.சங்கர் தலைமையில் நடைபெற்றது.

இதில் 200-க்கும் மேற்பட்ட அக்கு பஞ்சர் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் எந்தவிதமான நோய்களையும் மருந்தில்லா மருத்துவம் மூலம் குறைதீர்த்து குணப்படுத்தும் முறையை பரப்பும் வகையிலும், இந்த மருத்துவத்தில் எந்த பக்க விளைவும் இல்லை, ஆற்றல் உள்ள மருத்துவம் என்பதை அரசு ஏற்று, அதற்கான தேர்வையும் நடத்தி ஆவன செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments