இமாச்சலப் பிரதேசத்தில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. 2500 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருப்பதால் பயணிகள் அவதி!

0 1071

இமாச்சலப் பிரதேசத்தில் நள்ளிரவு முதல் 2500 பேருந்துகள் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஊதிய உயர்வு ,ஓவர்டைம் ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பணிக்கு வரமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்குவதாக தொழிலாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. மொத்தம் 3300 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பேருந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக இயங்கவில்லை.

சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments