ஊழலுக்கு எதிராக 5 நாள் நடைபயணத்தை தொடங்கினார் சச்சின் பைலட்..

0 2102

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஊழலுக்கு எதிரான வெகுஜன போராட்டம் என்ற பெயரில் முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் நடைபயணம் தொடங்கி உள்ளார்.

அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த சச்சின் பைலட் போர்க் கொடி தூக்கி வருகிறார்.

இதன் ஒருபகுதியாக, ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரை 125 கிலோமீட்டர் தூரத்துக்கு 5 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக அவர் அறிவித்திருந்தார்.

அதன்படி தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சச்சின் பைலட் நடைபயணம் துவங்கியுள்ளார். இந்த நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சிக் கொடி இடம்பெறவில்லை. அதற்கு பதில் தேசியக்கொடிகளை அவரது ஆதரவாளர்கள் ஏந்திச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments