தனது கணவரை விவாகரத்து செய்வதாக ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் இன்ஸ்டாகிராமில் பதிவு..!

0 1420

ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

37 வயதான சன்னா மரின் 2019-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். உலகின் இளம் பிரதமர் என அறியப்பட்ட சன்னா மரினுக்கும், காதலர் மார்கஸ் ரைக்கோனனுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், 2020-ம் ஆண்டு இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் கணவருடன் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் சன்னா மரின் தெரிவித்துள்ளார். தாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம் எனவும் சன்னா மரினும், மார்கசும் தனித்தனியாக இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments