திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்..!

0 2606

சத்தீஸ்கரில், திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பலோட் மாவட்டத்தின் தல்லி-ராஜரா நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மேடையில் மணமக்களுடன் பஞ்சாபி பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த திலீப் ரௌஜ்கர் என்பவர் திடீரென நெஞ்சை பிடித்து கீழே விழுந்துள்ளார்.

பின்னர், அவரை உறவினர்கள் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

நடனமாடியபோது உடலுக்கு அதிக ரத்தம் தேவைப்பட்டதாலும், இதயத்துடிப்பு அதிகரித்தன் காரணமாகவும் ரத்த குழாய்கள் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments