ராஜஸ்தானில் ரூ 5,500 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ராஜஸ்தானில் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
நவீனமயமாக்கப்பட உள்ள உதய்பூர் ரயில் நிலையத் திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மாநிலத்தின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து, அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களைத் தொடங்கி வைத்து சில புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
மூன்று தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் நிறைவு அடைந்திருப்பதால் அவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.பழங்குடியினத்தவர், ஏழைகளுக்கான இலவச பன்னோக்கு மருத்துவமனைக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
Comments