ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசித் தாக்கியதில் 5 வீரர்கள் வீரமரணம்..!

0 1146

ஜம்மு - காஷ்மீரின் ரஜௌரியில் பயங்கரவாதிகளுடனான  துப்பாக்கிச்சண்டையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கண்டியின் கேசரி பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஏற்கனவே 2 வீரர்கள் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த மேலும் 3 வீரர்கள் சிகிச்சை பலனின்றி வீரமரணமடைந்தனர்.

துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வரும் நிலையில், ரஜெளரியில் பாதுகாப்பு நடவடிக்கையாக மொபைல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments