300 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டி சாகசம் செய்ய முயன்ற யூடியூபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

0 3548

டெல்லி அருகே, மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டி சாகசம் செய்ய முயன்ற யூடியூபர், விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

தனது பைக் சாகசங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் அகஸ்தியா செளஹான். பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக பைக் ஓட்டியதாக இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

தனது கவஸாக்கி நிஞ்சா பைக்கை ஆக்ரா - டெல்லி எக்ஸ்பிரஸ்வே சாலையில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியன் மீது மோதியது.

சாலையில் வேகமாக தூக்கி வீசப்பட்டதில் ஹெல்மெட் உடைந்து தலையில் படுகாயமடைந்த செளஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments