கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் காலி நிலத்தில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு..!

கலிபோர்னியாவில் ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர்.
திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2 மணியளவில், beechcraft a36 ரக சிறிய விமானம், பிக் பயர் விமான நிலையத்துக்கு அருகேயுள்ள பிரபலமான ரிசார்ட் பகுதியில் காலி நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சம்பவத்தன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்ததாக கூறப்படும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கலிபோர்னியாவில் கடந்த 3 நாட்களில் 2வது முறையாக சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments