நாங்க ரவுடி இல்லை.... மண்ணுக்குள்ள புதைத்தால் மரமாகி நிழல் தருவோம்... பிபிஜி குமரனின் மனைவி வீடியோ..!

0 1792

பா.ஜ.க பிரமுகர் பிபிஜி சங்கர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டணம் தெரிவித்து பிபிஜி குமரனின் மனைவி யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் தாங்கள் ரவுடிகள் அல்ல என்றும், ரவுடிகளாக இருந்தால் தங்களை கொலை செய்ய வந்தவர்களை தாங்களே கொலை செய்திருப்போம் என்றும், எத்தனை உயிர்களை எடுத்தாலும் அஞ்சமாட்டோம் எனவும் கூறி உள்ளார்...

சென்னையை அடுத்த பூந்தமல்லி வளர்புரம் ஊராட்சிமன்றத் தலைவரும் பாஜக பிரமுகருமான பிபிஜி சங்கர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சாந்தகுமார் , உதயகுமார் உள்ளிட்ட 9 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ள நிலையில், இந்த கொலையின் பின்னணியில் குன்றத்தூரை சேர்ந்த பிரபல ரவுடிக்கு தொடர்பிருப்பதாக போலீசார் சந்தேகித்து அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் பிபிஜி குமரனின் மனைவி பிரசிதா யூடியூப்பில் கொலையாளிகளுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தங்களை ரவுடி என்று குறிப்பிட வேண்டாம் என்றும், ரவுடிகளாக இருந்தால் தங்களை கொலை செய்தவந்தவர்களை தாங்களே கொலை செய்திருப்போம் என்றும், ரவுடிகளாக இருந்தால் எபோதும் காரில் 10 பேரை உடன் அழைத்துக் கொண்டு சுற்றி இருப்போம் என்றும் பிரசிதா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

கொலையாளிகளுக்கு தூக்கனாங்குருவி கூடு கட்டும் கதையை கூறி தங்கள் குடும்பத்தினரின் மன உறுதியை தெரிவித்த பிரசிதா, தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதால் அஞ்சமாட்டோம் என்றும் மண்ணுக்குள் போட்டு புதைத்தாலும் மரம் தரும் நிழலாக எழுவோம் என்றும் கூறி உள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments