உள்நாட்டுப் போர் நடைபெறும் சூடானில் இருந்து இதுவரை 2,000 இந்தியர்கள் மீட்பு

0 920

ஆபரேசன் காவேரி திட்டத்தில் சூடானில் இருந்து மேலும் 135 இந்தியர்கள் விமானம் மூலம் ஜெட்டா வழியாக இந்தியா புறப்பட்டதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் மீட்பு நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து வருகிறார். 9 வது தவணையாக, பயணிகள் கப்பல் மூலமாக சூடானில் இருந்து ஜெட்டா அழைத்து வரப்பட்ட 326 பேர் விமானம் மூலமாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

3,500 இந்தியர்கள் சூடானில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுவரை 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments