15 நிமிடங்களில் ஏடிஎம்-ஐ கொள்ளையடிப்பது எப்படி.? ரகசிய பயிற்சி நிறுவனம் பீகாரில் கண்டுபிடிப்பு - போலீஸ் விசாரணை

0 1368

பீகாரில், வேலையில்லாத இளைஞர்களுக்கு 15 நிமிடங்களில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிப்பது எப்படி? என 3மாத கோர்ஸாக பயிற்சியளித்த கோச்சிங் சென்டரை, உத்தர பிரதேச போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

லக்னோவில் ஏடிஎம்மை உடைத்து 39 லட்ச ரூபாய் பணத்தை திருடியதாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9 லட்சத்தை மீட்ட காவல்துறையினர், பான் - இந்தியா கும்பலின் தலைவனான மிஸ்ரா-வை கைது செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

தன்னுடைய திறமையின் மூலம் ஏடிஎம் பாபா என அழைக்கப்படும் சுதிர் மிஸ்ரா, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏ.டி.எம்-களை 15 நிமிடத்தில் உடைத்து கொள்ளையடிப்பதற்கு 3 மாத பயிற்சி வழங்கி இருக்கிறார்.

இந்தக் கும்பல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments