போர்க் களங்கள், வெடிகுண்டுகளில் எல்லாம் உயிர் தப்பிய ராணுவ வீரர் பட்டாசு வெடித்து பலி..

போர்க் களங்கள், வெடிகுண்டுகளில் எல்லாம் உயிர் தப்பிய ராணுவ வீரர் ஒருவர், பட்டாசு வெடிக்க முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிராமம் ஒன்றில் நடைபெற்றது. நிர்பய் சிங் என்ற அந்த ராணுவ வீரர் காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டு இருந்தார்.
ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்தின் போது பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார். பிறருக்கு வேடிக்கை காட்டும் வகையில், ராக்கெட் ஒன்றை எடுத்து வாயில் வைத்து கொளுத்தி உள்ளார்.
எதிர்பாராத வகையில் அந்த ராக்கெட் பலத்த சத்தத்துடன் வெடித்து ராணுவ வீரர் வாய் கிழிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்பதை உணர்ந்து, பட்டாசுகளை எச்சரிக்கையுடன் வெடிக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
Comments