இந்திய நிறுவனங்கள் நேர்மைக்கு பெயர் பெற்றவை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

இந்திய நிதி நிறுவனங்கள் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதாகவும், இந்திய நிறுவனங்கள் நேர்மைக்கு பெயர் பெற்றவை என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற குடியரசு உச்சி மாநாட்டின் 3-வது பதிப்பில் மாற்றத்தின் நேரம் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி சரிவு குறித்து பேசினார்.
இந்திய நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டிய அவர், இந்திய நிறுவனங்கள் ஒருமைப்பாட்டிற்கு பெயர்பெற்றவை என்றும், பரிதாபப்படும் நிலையில் இல்லை என்றும் தெரிவித்தார்.
தங்கள் நிறுவனங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன என்று யாராவது கூறினால் அவர்கள் அறியாதவர்கள் அல்லது அரசியல் கருத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
Comments