இரும்புக் கம்பிகளை திருடி மது அருந்திய 2பேரை தர்ம அடி அடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இரும்புக் கம்பிகளை திருடி மது அருந்திய 2பேரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
வேடசந்தூர் கடைவீதியில் இயங்கி வரும் இரும்பு கடையின் பின்புறம் உள்ள குடோனில் இருந்து இரும்பு கம்பிகளை 2 பேர் திருடி செல்வதாக அதன் உரிமையாளருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அவர்களைத் தேடிச் சென்ற உரிமையாளர் அங்கிருந்த மதுபானக் கடைக்குள் மது அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டு கையும் களவுமாக பிடித்து விசாரித்தார்.
ஆனால் அவர்கள் உண்மையை சொல்ல மறுத்ததால் அங்கிருந்தவர்கள் தர்ம அடி கொடுத்த போது தாங்கள் இரும்புக் கம்பி திருடி அதில் கிடைத்த பணத்தில் மது அருந்தியதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் இருந்த அவர்கள் இருவரும் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Comments