அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப நிலை தணிந்திருக்கும் - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப நிலை தணிந்திருக்கும் - வானிலை ஆய்வு மையம்
பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்திய நிலையில் பள்ளிகள், அலுவலகங்களின் நேரத்தை மாற்றியமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரளவுக்கு கோடையின் வெப்பம் குறைந்து காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சூறாவளியின் சுழற்சி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதால் வெப்ப நிலை தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments