உக்ரைனுக்கு 6 Leopard 2A4 டாங்கிகளை அனுப்பிவைத்த ஸ்பெயின்..!

0 1088

உக்ரைனுக்கு 10 Leopard டாங்கிகள் அனுப்பப்படும் என இம்மாத தொடக்கத்தில் ஸ்பெயின் அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக 6 Leopard டாங்கிகளை அனுப்பியுள்ளது.

Leopard 2A4 டாங்கிகள் மற்றும் 20 M114 APC கவச போர் வாகனங்கள் சாண்டாண்டர் துறைமுகத்தில் (Santander port) இருந்து சரக்கு கப்பலில் உக்ரைனுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அவை போலந்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் உக்ரைனுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த Leopard டாங்கிகள் 1990 களில் இருந்து பயன்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஜெர்மனி, போலந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட பிற நேட்டோ நாடுகளும் உக்ரைனுக்கு 48 Leopard 2 டாங்கிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments