தினசரி 12 மணி நேர வேலை.. மசோதா நிறைவேறியது.. முழு விவரம்..!

விரும்பும் தனியார் நிறுவனங்களில் மட்டுமே பணியாளர்களின் தினசரி வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்ட மசோதா, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேறியது.
தினசரி 12 மணி நேரம் என, வாரத்தில் 4 நாட்கள் வேலை; 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை, இந்த சட்டம் கொண்டுள்ளது. மசோதாவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.
பேரவையில் பேசிய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், இந்த சட்டம், அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தாது என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியாவில் தொழில் நடத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில், நெகிழ்வுத் தன்மையை விரும்புவதாக கூறினார். அதற்காகவே இந்த சட்டம் என்றார்..
இந்த சட்டத்தை எதிர்த்து, திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Comments