எங்க தலைவர் ஆட்சியில் மூட்டை மூட்டையா தூக்குனோம்.. கட்சிக்காரனுக்கு ரேசன் கடை சொந்தம்..! மிரள விட்ட பெருசு வீடியோவில் சிக்கினார்

0 2757

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே ஒரே நேரத்தில் 10 பேரின் ரேசன் அட்டைகளுடன் சென்று நியாய விலை கடையில் பொருள் கேட்ட திமுக பிரமுகருக்கு பொருள் வழங்க மறுத்ததால், விற்பனையாளருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எஸ்.ஏ.பி நகரில் உள்ள ரேஷன் கடையில் மேனகா என்பவர் விற்பனையாளராக உள்ளார். இந்த கடைக்கு சென்ற திமுக பிரமுகர் அமீர் பாட்சா என்பவர் 10 ரேஷன் கார்டுகளை கையில் வைத்துக்கொண்டு பொருட்களை கேட்டுள்ளார்.

அதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் உங்கள் வீட்டு ரேஷன் கார்டுக்கு என்ன பொருட்கள் தேவையோ அதை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மற்ற கார்டுகளுக்கு உரியவர்கள் வந்தால் தான் பொருட்கள் தரமுடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த அமீர் , கடந்த காலங்களில் எப்படியெல்லாம் ரேசன்கடையில் மூட்டையை தூக்கினோம் என்று பழைய வரலாறுகளை வாக்குமூலமாக கூறி மிரட்ட தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் கட்சிக்காரனுக்கு இந்த பகுதியில் உள்ள நான்கு ரேசன் கடைகளும் சொந்தம் என்று கட்சியில் தான் வகித்து வரும் பொறுப்பை கூறி, உன்னால் பொருட்கள் தர முடியவில்லை என்றால் நாளைக்கு வீட்டுக்கு சென்று விடுவாய், ஆளை மாற்ற போகிறோம் என்றும் பகிரங்கமாக மிரட்டினார்.

இந்த சம்பவத்தின் போது, அருகில் இருந்த எடையாளர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments