பள்ளி புத்தகப் பை தயாரிக்கும் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்கள்.. ரெய்டு வருவது தெரிந்ததும் பை கிடங்குக்குள் மறைக்கப்பட்ட சிறார்கள்..

0 1282
சென்னை மண்ணடியில் பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பை தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து 27 வெளிமாநில குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை மண்ணடியில் பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பை தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து 27 வெளிமாநில குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ஷாமா எண்ட்டர் பிரைசஸ் என்ற அந்த நிறுவனத்தில் 15 வயதுக்குட்பட்ட வெளிமாநில சிறுவர்களை அடைத்து வைத்து, வேலை வாங்குகின்றனர் என குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

அதிகாரிகள் சோதனைக்காக செல்வது தெரிந்ததும், அங்கு வேலை செய்த சிறார்களை புத்தகப் பைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் போட்டு மறைத்துள்ளனர்.

கிடங்கின் கதவைத் திறக்கச் சொல்லி அதிரடியாக நுழைந்த அதிகாரிகள் 27 சிறார்களை மீட்டனர். வெளிமாநிலங்களைச் சேர்ந்த இந்த சிறார்களை இடைத்தரகர்கள் மூலம் அழைத்து வந்து, அடைத்து வைத்து, மூன்று வேளை உணவு மட்டும் கொடுத்து, சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments