முந்திரிக்காட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து : 4 பேர் படுகாயம்

0 1229
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காட்டுப்பன்றிகளை கொல்வதற்காக முந்திரிக்காட்டில் வைத்து நாட்டு வெடி தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காட்டுப்பன்றிகளை கொல்வதற்காக முந்திரிக்காட்டில் வைத்து நாட்டு வெடி தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

முந்திரித்தோப்புகளில் மரத்திலிருந்து கீழே விழும் பழங்களை காட்டுப்பன்றிகள் தின்பதை தடுக்கும் வகையில் நாட்டு வெடிகளை முந்திரிக்காட்டில் பயன்படுத்துவது பழக்கமென கூறப்படுகிறது.

இதன்படி, குருவங்குப்பம் பகுதியில் அதேப்பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன், இளையக்குமார், மருதுபாண்டி மற்றும் 13 வயது சிறுவன் ஆகியோர் ஜல்லிக்கற்கள், வெடிமருந்துகளைக் கொண்டு நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, திடீரென வெடிமருந்து வெடித்து சிதறியதில் ரங்கநாதனுக்கு ஒரு கால் துண்டானதோடு மற்றவர்களும் பலத்த காயமடைந்தனர். இவர்களில், 3 பேர் புதுச்சேரி ஜிப்மரில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்,  விருத்தாச்சலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் விசாரித்து வருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments