உலக அளவில் இறால் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு முதலிடம் - இணை அமைச்சர் எல்.முருகன்

0 1278

லக அளவில் இறால் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளதாகவும், பிரதமரின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை, மகாபலிபுரம், மரக்காணம் பகுதியிலிருந்து அதிகளவில் இறால் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் எல்.முருகன் பங்கேற்றார். அனைத்து கிராமங்களும் பிரதமரின் திட்டங்களால் பயனடைந்துள்ளதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், முத்ரா திட்டத்தில் பெண்கள் அதிகம் பயன்பெற்ற மாநிலம் என்ற இலக்கை தமிழ்நாடு அடைந்துள்ளதாகவும், அத்திட்டத்தால் பயனடைந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments