விவசாயியின் வேளாண் பண்ணைக்கு சென்று பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி..

0 2077

ரண்டு நாட்கள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்குள்ள திரு உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, எட்டிவயல் கிராமத்தில் ஒரு விவசாயியின் வேளாண் பண்ணைக்கு சென்ற ஆளுநர், பசுமை தோட்டத்தை பார்வையிட்டார். பின்னர், அப்பகுதியில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர், தானும் ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன் தான் என்றார்.

100 ஆண்டுகளாக விவசாயத்தை பாரம்பரியமாக காத்து, உலகத்திற்கே உணவு வழங்கும் வகையில் இந்தியா உணவு உற்பத்தியில் சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments