கணவனின் சந்தேகத் தீ.. 29 நாள் குழந்தையை புதைத்த போ(பே)தை.. என்ன பாவம் நான் செய்தேன் தாயே...

0 2322

புதுச்சேரி அடுத்த மனப்பட்டு சுடுகாட்டில் பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி எல்லை பகுதியான மனப்பட்டு சூடுகாட்டில் பச்சிளம் குழந்தை ஒன்று அரைகுறையாக புதைக்கப்பட்டு அதன் கால் பகுதி மட்டும் தெரிவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டனர். அங்கு வந்த குழந்தையின் தாய் சடலமாக இருந்த குழந்தையை பார்த்து கதறி அழுதார், தொடர்ந்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைகாக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த நரிகுறவர்களான குமரேசன் - சங்கீதா ஆகிய இரண்டு பேருமே இரண்டாம் திருமணம் செய்து கொண்டு புதுச்சேரி எல்லை பகுதியான மனப்பட்டில் தங்களின் மகன் உடன் சமீப காலமாக வசித்து வந்தது தெரியவந்தது.

இவர்களுக்கு கடந்த 29 நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்ததாகவும் அதற்கு உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்ததால் யாருக்கும் தெரியாமல் புதைத்ததாக தெரிவித்துள்ளனர்.

சந்தேகமடைந்த போலீசார், அப்படி என்றால் யாருக்கும் தெரியாமல் குழந்தையை அரைகுறையாக புதைத்தது ஏன் ? என்று விசாரித்த போது வசமாக சிக்கிக் கொண்டனர்.

சம்பவத்தன்று இரவு கணவன் மனைவிக்குள் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கணவன், தனது மனைவியிடம், இந்த குழந்தை யாருக்கு பிறந்தது? என கேள்வி எழுப்பி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் எல்லா பிரச்சனைக்கும் இந்த குழந்தை தானே காரணம் என்று ஆத்திரமடைந்த தாய் சங்கீதா, குழந்தையை தூக்கிக் கொண்டு மனப்பட்டு சுடுகாட்டிற்கு சென்று கையால் குழி தோண்டி, அந்த பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையின் தாய் சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments