தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு...! பாஜகவிலிருந்து வெளியேறிய நிலையில் எம்.எல்.ஏ பதவியை துறந்த ஷெட்டர்

0 1200

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்காததால் பாஜகவிலிருந்து வெளியேறிய முன்னாள் முதலமைச்சர் ஜகதீஷ் ஷெட்டர் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

கர்நாட சட்டப்பேரவைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஷெட்டருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த ஷெட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டேவிடம் நேரில் வழங்கினார்.

ஷெட்டரின் ராஜினாமாவால் பாஜகவுக்கு லேசான பாதிப்பு ஏற்படுமென கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ள நிலையில், அவர் மீண்டும் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments