2023-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகியாக ராஜஸ்தானின் நந்தினி குப்தா தேர்வு..!

0 1131

2023-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகியாக ராஜஸ்தானை சேர்ந்த 19  வயது இளம்பெண் நந்தினி குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இம்பாலில் நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில்,30 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் ராஜஸ்தானின் kota பகுதியை சேர்ந்த நந்தினி குப்தா மிஸ் இந்தியா அழகியாக தேர்வான நிலையில், அவருக்கு முன்னாள் மிஸ் இந்தியா அழகியான சினி ஷெட்டி மகுடம் சூட்டினார்.

டெல்லியின் ஷ்ரேயா பூஞ்சாவும், மணிப்பூரின் Strela Luwang-ம் 2வது மற்றும் 3வது இடங்களை பிடித்தனர். மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில், நந்தினி குப்தா பங்கேற்கவுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments