லாரி - இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. பைக் ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி

கேரள மாநிலம் மலப்புரம் அருகேயுள்ள தாணூர் பகுதியில் லாரி-இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பைக் ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மலப்புரம் மாவட்டம் திரூர் நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட இரு சக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்டு சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. பதை பதைக்க வைக்கும் விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Comments