திமுக தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை..!

234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை துரிதப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவில் முடிக்குமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments