கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் எழுப்பிய நபர்.. பெண்கள் ஒன்று திரண்டு கடப்பாரையால் சுற்றுச்சுவரை இடித்து தள்ளினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் கட்டியதாக கூறிய குற்றச்சாட்டின் கீழ் ஏராளமான பெண்கள் ஒன்று திரண்டு கடப்பாரை மூலம் அந்தச் சுவரை இடித்து தள்ளினர்.
நல்லகானகொத்தப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் எதிரே இருக்கும் 10 செண்ட் நிலம் கோவிலுக்கு சொந்தம் எனவும், அந்த வழி நீண்ட காலமாக பொதுமக்களின் பொதுப் பாதையாக இருந்து வந்ததாகவும் அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவில் எதிரே உள்ள 10 செண்ட் நிலம் தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கோவில் முன்பு தனி நபர் ஒருவர் சுற்றுச்சுவர் அமைத்ததாகவும் கூறப்படுகிறது.
Comments