ஓடும் பேருந்திலிருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்-ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
மதுரையில் மாவட்ட ஆட்சியர் வழங்கிய வேலையை செய்ய விடாமல் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகக் கூறி ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, மையிட்டான்பட்டி ஊராட்சி செயலாளர் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
5 குழந்தைகளுக்குத் தாயான நாகலட்சுமி என்ற அந்தப் பெண் எழுதியிருந்த கடிதத்தின் அடிப்படையில், மதுரை கூடுதல் ஆட்சியர் சரவணன் தலைமையிலான குழுவினர், மையிட்டான்பட்டி கிராம ஊராட்சி செயலாளர் முத்துவிடம் சுமார் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு புறம் முத்துவுடன் சேர்த்து, துணைத்தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார் ஆகியோர் மீது நாகலட்சுமியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments