பஞ்சாப்பில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் உடல் இன்று தமிழகம் கொண்டுவரப்படுகிறது..!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் 2 பேரின் உடல் இன்று தமிழகம் கொண்டுவரப்படுகிறது.
நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த வனவாசியை சேர்ந்த தறி தொழிலாளியின் மகன் கமலேஷ் உயிரிழந்தார். 24 வயதான அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ராணுவத்தில் சேவையாற்றி வந்துள்ளார்.
உயிரிழந்த மற்றொரு தமிழக வீரர் தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த 23 வயதான யோகேஷ் குமார். வீட்டில் ஒரே மகனான இவர் ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றி வந்ததுடன், தனது பெற்றோர்களுக்கு புதிதாக வீடும் கட்டிக்கொண்டு வந்துள்ளார். யோகேஷ் குமாருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் வரண் பார்த்துவந்த நிலையில், நாட்டிற்காக வீர மரணம் அடைந்துள்ளார்.
Comments