காதலை கைவிட மறுத்த முன்னாள் காதலனை புதிய ஆண் நண்பருடன் சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த காதலி கைது..!

கேரளாவில் காதலை கைவிட மறுத்த முன்னாள் காதலனை புதிய ஆண் நண்பருடன் சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து தாக்கியகாதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் அருகிலுள்ள ஐரூரைச் சேர்ந்த அபிராம், வர்கலா பகுதியைச் சேர்ந்த லட்சுமிபிரியாவை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேல்படிப்புக்காக எர்ணாகுளம் சென்ற லட்சுமிபிரியா அங்கு அமல் என்பவருடன் பழகியதால், அபிராமிடம் காதலை கைவிடுமாறு கூறியுள்ளார்.
இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, கடந்த 5ம் தேதி அமல் மற்றும் 2 பேருடன் காரில் வந்த லட்சுமிபிரியா அபிராமையும் தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றுள்ளார்.
எர்ணாகுளத்தில் ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அபிராமை தாக்கி நிர்வாணப்படுத்தி அதனை வீடியோவாக எடுத்ததோடு, செல்போன், தங்க நகை, 5 ஆயிரம் ரூபாயையும் பறித்துள்ளனர். பின்னர், அபிராமை பேருந்து நிறுத்தமொன்றில் போட்டு விட்டுச் சென்ற நிலையில், அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக லட்சுமிபிரியா, அமலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments