எம்.பி பதவி தகுதிநீக்கத்திற்கு பின் வயநாடு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு..!

கேரளாவின் வயநாட்டில், வாய்மையே வெல்லும் என்ற தலைப்பில் ராகுல் காந்தி வாகன பேரணி மேற்கொண்ட நிலையில், ஏராளமான தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு தெரிவித்து திரண்டனர்.
மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், முதன்முறையாக தான் போட்டியிட்ட வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி சென்றார். அவருக்கு ஆதரவாக அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வாகன பேரணியில் பங்கேற்ற நிலையில், கூடியிருந்த தொண்டர்களை நோக்கி ராகுல் காந்தி கையசைத்தபடி சென்றார்.
வாகன பேரணியின் போது, கட்சிக்கொடியை பயன்படுத்த வேண்டாமென ராகுல் அறிவுறுத்திய நிலையில், தேசியக்கொடியையும், ராகுல் காந்தியின் படங்களையும் தொண்டர்கள் ஏந்தி வந்தனர்.
Comments