தென்கொரியாவின் கங்னங் பகுதியில் பற்றிய காட்டுத் தீ..! முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றம்

தென்கொரியாவின் கிழக்குப் பகுதியில் பற்றிய காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் சியோலுக்கு தென்கிழக்கே 168 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கங்னங் (Gangneung) பகுதியில் செவ்வாய்கிழமை காலை காட்டுத் தீ பரவியது.
பலத்த காற்றின் காரணமாக காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால், 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 6 ஹெலிகாப்டர்கள், 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காட்டுத் தீயின் காரணமாக 20க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Comments