''கொரோனா தொற்றை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்..'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

தமிழ்நாட்டில் கொரொனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக, அரசு மருத்துவமனைகளில் 64 ஆயிரத்து 281 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 33 ஆயிரத்து 664 ஆக்சிஜன் படுக்கைகளும், 7 ஆயிரத்து 997 ஐசியு படுக்கைகளும் தயாராக உள்ளதாகக் கூறினார்.
Comments