ஆபத்தை உணராமல் விவசாய டிராக்டரை ஓட்டிய 6ஆம் வகுப்பு மாணவன்..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஆபத்தை உணராமல் டிராக்டரை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியான நிலையில், இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கே.ஜி.கண்டிகை ஊராட்சி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை மாநில நெடுஞ்சாலையில் சிறுவன் ஓட்டி வருவதும், அதில் மேலும் இரண்டு சிறுவர்கள் அமர்ந்து வருவதும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற செயல்களை பெற்றோரும், காவல்துறையும் ஏன் கண்டிக்கவில்லை என்னும் கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
Comments