முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் மீண்டும் போர்க்கொடி..!

ராஜஸ்தானில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் நாளை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளார்.
2018ம் ஆண்டு தேர்தலின்போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை பூர்த்தி செய்ய வேண்டியது காங்கிரஸின் கடமை என்று தெரிவித்துள்ள சச்சின் பைலட், வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பாஜக ஆட்சியின்போது ஊழல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.
Comments