விமான நிலைய ஊழியர் கொலை வழக்கில், அவரது உடல் பாகங்களை கோவளம் அருகே குட்டை ஒன்றில் இருந்து பறிமுதல் செய்த போலீசார்

0 2461

சென்னை விமான நிலைய ஊழியர் துண்டுத்துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது உடல் பாகங்களை கோவளம் அருகே குட்டை ஒன்றில் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜெயந்தன் என்ற அந்த இளைஞர், கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் மாயமானார். தன்னைவிட 9 வயது மூத்த பாக்கியலட்சுமி என்ற பாலியல் தொழிலாளியை ஜெயந்தன் திருமணம் செய்திருந்ததும் திருமணத்துக்குப் பிறகும் பாலியல் தொழிலை தொடர்ந்து வந்த பாக்கியலட்சுமிக்கும் ஜெயந்தனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பாக்கியலட்சுமியை கைது செய்து விசாரித்ததில், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஜெயந்தனை கொன்று, உடலை துண்டுத்துண்டாக வெட்டி பாலிதீன் கவர்களில் அடைத்து, கோவளம் அருகே குட்டையில் வீசியது தெரியவந்தது. 20 நாட்கள் கடந்த நிலையில் ஜெயந்தனின் உடல் பாகங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments