சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்.. பொதுமக்களுக்கு மோர், இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார் ஆர்.எஸ்.ராஜேஷ்..!

சுட்டெரிக்கும் வெயிலினால் கூலித் தொழிலாளர்கள், சாலையோர வாசிகள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக சென்னை ஆர்கே நகர் எண்ணூர் நெடுஞ்சாலை அருகே வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டன.
அதிமுக மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
வெள்ளரிக்காய், தர்பூசணி, முலாம்பழம், சாத்துக்குடி திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்ட ஐந்து டன் எடையில் ஆன பழங்களை 20 தள்ளு வண்டிகளில் அடுக்கி ஏழை எளிய மக்களுக்கு வழங்கபட்டது.
அதன் பின்பு தள்ளுவண்டிகளையும் இலவசமாக பழ வியாபாரிகள், கூலி தொழிலாளி களுக்கு வியாபாரம் செய்ய ஏதுவாக அவர்களுக்கு வழங்கபட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கமலா திரையரங்கம், இந்திரா நகர், ரயில் நிலையம் அருகில் அதிமுக மாணவர் அணி சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல்களை அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.அரி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
Comments