பிக்பாஸ் அபிராமியும் இப்படியா.? பாலியல் புகாரில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக குரல்... எல்லாத்துக்கும் காரணம் நிர்மலாவாம்..!
கலாசேத்ரா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி கொடுத்த பாலியல் புகாரில் கைதான நாட்டிய ஆசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக பிக்பாஸ் நடிகை அபிராமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கலாசேத்ரா ஆசிரியை நிர்மலா தான் மாணவிகளை தூண்டிவிடுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்
நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட சில படங்களில் நடித்ததோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை அபிராமி
கலாசேத்ரா கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளால் முன்வைக்கப்பட்ட பாலியல் புகாருக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார் அபிராமி.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ள அபிராமி, தானும் கலாச்சேத்ராவின் முன்னாள் மாணவி என்பதால் இதை தெரிவிப்பதாக கூறியதோடு, இது முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்கின்ற பதவி அரசியல் என்றும் கடந்த காலங்களில் தலைமை பதவியில் இருந்த லீலாசாம்சனுக்கு எதிராக இதே போன்ற புகாரை கொடுக்க தான் நிர்பந்திக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்
போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நடன ஆசிரியர் ஹரி பத்மன் அடுத்த தலைமைக்கு தயாரான நிலையில் திட்டமிட்டு முன்னாள் மாணவி ஒருவர் மூலம் அவர் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். முன்பு நடந்த பிரச்சனைக்கு இவ்வளவு நாள் கழித்து புகார் அளித்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய அபிராமி, கல்லுரியில் உள்ள ஆசிரியை நிர்மலா என்பவர் தான், மாணவிகளை ஒருங்கிணைத்து புகார் அளிக்க தூண்டியதாக குற்றஞ்சாட்டினார்
சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதுபடுத்துகிறார்கள் என்றும் கலாச்சேத்ராவில் நடக்கின்ற அரசியலை கூறினால் தன்னை சங்கி... வங்கின்னு சமூக வலைதளங்களில் சிலர் விமர்சிப்பதாக பிக் பாஸ் அபிராமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்
கலாச்சேத்ரா கல்லூரி ஆசிரியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் கைது செய்யப்பட்ட நடன ஆசிரியர் ஹரிபத்மனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் பிக்பாஸ் அபிராமி முன்னாள் மாணவி என்ற பெயரில் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடதக்கது.
Comments