"தற்போதுள்ள இளைஞர்கள் ஒரே வேலையில் நிலையாக இருப்பதில்லை" - டி.ஜி.பி சைலேந்திரபாபு..!

சென்னை வேளச்சேரியில் காவலர்களின் குடும்பத்தினருக்கு தனியார் நிறுவன பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, தற்போதுள்ள இளைஞர்கள் ஒரே வேலையில் நிலையாக இருப்பதில்லை என்றும் இளைஞர்களிடையே அறிவு, தொழில்திறன் மனப்பான்மை குறைந்துவிட்டது என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்ற ஆண்டு வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்கள் ஒரு வாரத்தில் வேலை விட்டு விட்டனர் என்றார்.
இளைஞர்களுக்குப் பொறுமை இல்லை என்று கூறிய அவர், முதலில் வருமானம் குறைவாக இருந்தாலும் திறமையை வளர்த்து கொண்டால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றும் சம்பளம் அதிகரிக்கும் என்றும் அறிவுறுத்தினார்.
Comments