ரேர் பீஸ் பாம்பு.. ஒர்க் ஷாப்புக்குள் எப்படி வந்தது..? சர்வதேச மார்க்கெட்டில் 300 US டாலர்

0 6510

மோசடி கும்பலால் ரேர் பீஸ் என்று சொல்லி விற்கப்படும் கரடு முரடான மண்ணுளி பாம்பு ஒன்று சென்னை மாதாவரத்தில் உள்ள மெக்கானிக் கடையில் சிக்கி உள்ளது..

சதுரங்க வேட்டை படத்தில் ரேர் பீஸ் என்று மோசடி கும்பலால் பாம்பு ஒன்று லட்சங்களில் விலை வைத்து விற்கப்படுவது போலவும், அந்த பாம்புக்கு இளையதளபதி விஜய் என்று பெயரெல்லாம் வைத்து மோசடி கும்பல் ஏமாற்றுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அப்படி ஒரு ரேர் பீஸ் வையை சேர்ந்த கரடு முரடான மண்ணுளி பாம்பு ஒன்று மாதவரத்தில் சிக்கி உள்ளது

சென்னை மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள லாரி பழுது பார்க்கும் மெக்கானிக்கடை ஒன்றிற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதால் அந்தகடையில் இருந்தவர்கள் கட்டுவிரியன் பாம்பு என்று நினைத்து அலரிடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்

கடையின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அது அரியவகை மண்ணுளிப் பாம்பு என்பதை கண்டுபிடித்தனர். கடையில் இருந்து அந்த பாம்பை பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பெரும்பாலான மண்ணுளி பாம்புகள் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் நிலையில் கட்டுவிரியன் தோற்றத்தில் இருக்கும் இந்தவகை மண்ணுளி பாம்புகள் அரிதானவை என்று கூறப்படுகின்றது.

கரடு முரடான தோற்றத்தில் காட்சி அளித்தாலும், மண்புழுவகையை சேர்ந்த இவ்வகை பாம்புகளின் கழிவுகள் விவசாயத்திற்கு நல்ல உரம் என்றும் மண்புழுக்களை போல இந்தவகை பாம்புகளும் விவசாயிகளின் தோழன் என்று சுட்டிக்காட்டும் வனத்துறையினர்.

மஞ்சம்பாக்கம் பகுதியில் விவசாய நிலங்கள் மண்கொட்டப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்ட நிலையில் திடீர் மழையால் இந்த வகை பாம்புகள் வெளியே வந்திருக்கலாம் என்றும் இதற்கு சர்வதேச மார்க்கெட்டில் பல கோடிகள் மதிப்பு என்று யாராவது சொன்னால் நம்பி ஏமாந்துவிடாதீர்கள் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் சர்வதேச அளவில் மார்ஃப் ஆன் லைன் மார்க்கெட்டில் இந்தவகை மண்ணுளி பாம்புகள் 300 டாலர் அதாவது இந்திய பண மதிப்பிற்கு 24 ஆயிரத்து 762 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments