''நாளை முதல் ஆவினுக்குப் பால் வழங்குவது படிப்படியாக நிறுத்தப்படும்..'' - பால் உற்பத்தியாளர் சங்க தலைவர்..!

பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக அமைச்சர் நாசர் உடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நாளை முதல் பால் வினியோக நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு 42 ரூபாயும் எருமை பாலுக்கு 51 ரூபாயுமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது கோரிக்கை.
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு 27 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து வரும் நிலையில், நாளையிலிருந்து காலை 50 ஆயிரம் லிட்டர், மாலை 50 ஆயிரம் பாலை குறைக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments